மேல் மாகாணத்தில் உள்ள வைத்தியசாலை தாதியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்பநல வைத்திய அதிகாரிகள் ஆகியோர் நாளை (26/01) 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
ஏழு பிரதான கோரிக்கைகளை முன்வைத்தே இவர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
எனினும் குறித்த கோரிக்கைகளை ஏற்கெனவே முன்னிறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.