உள்நாட்டு அழகுக் கலை நிபுணர்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு

இலங்கையிலுள்ள அழகுக்கலை நிபுணர்கள் 500 பேருக்கு இலண்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்த பாடநெறிகளை தொடர்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானம் தீர்மானம் தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

அழகுத்துறையுடன் தொடர்புடைய பிரித்தானிய பிரதிநிதிகள் குழுவுடன் அண்மையில் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னரே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சுமார் 100 மில்லியனுக்கும் அதிக பெறுமதிகொண்ட இப்பாடநெறியினை அழகுத்துறையுடன் தொடர்புடைய 4 பிரிவுகளின் கீழ் தொடரலாமெனவும் சர்வதேச அங்கீகாரம் கொண்ட இப்பாடநெறியில் பிரித்தானிய விரிவுரையாளர்களிடம் சிங்கள மொழிபெயர்ப்பு மூலமான விரிவுரைகளையும் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு அழகுக் கலை நிபுணர்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version