பேராதனைப் பல்கலையில் 64 மாணவர்களுக்கு கொவிட்

பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 64 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர்கள் பல்கலைக்கழக இடைநிலை சிகிச்சை மத்திய நிலையங்களில் சிகிச்சைப் பெற்று வருவதாக பல்கலைகழகத்தின் பிரதி உபவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளாா்.

இன்று (27/01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து பல்கலைக்கழகத்தை முழுமையாக ஆரம்பித்ததன் பின்னர், சுகாதார வழிமறைகளுக்கமைய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள முறைகளை பின்னபற்றி, வரையறுக்கப்பட்ட அளவில் மாணவர்களை அழைத்து கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேராதனைப் பல்கலையில் 64 மாணவர்களுக்கு கொவிட்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version