திருமலை எண்ணெய் தாங்கி நிறுவனத்திற்கு பணிப்பாளர்கள் நியமனம்

திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தொடர்பில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உருவாக்கப்பட்டுள்ள, Trinco Petroleum Terminal Private Ltd நிறுவனத்துக்கு பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இதன்படி 61 எரிபொருள் தாங்கிகளையும் நிர்வகிக்கும் கூட்டு நிறுவனத்துக்கு சுமித் விஜேசிங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சார்பில் பேராசிரியர் பிரபாத் சமரசிங்க, புஹூபதி கஹதுடுவ மற்றும் தம்மிக்க மல்லிகாராச்சி ஆகியோர் பணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் சார்பில், மனோஜ் குப்தா, அஸீம் பார்ஹவா மற்றும் ராஜேஸ் பாகட் ஆகியோர் பணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருமலை எண்ணெய் தாங்கி நிறுவனத்திற்கு பணிப்பாளர்கள் நியமனம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version