மட்டன் நெஞ்செலும்பு சூப் ரெசிபி

இதை நாம் மிக எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி குறைந்தநேரத்திலேயே பிரஷர் குக்கரின் மூலம் செய்து விடலாம்.

மட்டன் நெஞ்செலும்பு சூப் ரெசிபி

மட்டன் நெஞ்செலும்பு சூப்பை வெவ்வேறு பகுதிகளில் அங்கு இருக்கும் சமையல் முறைக்கேற்ப சிறு சிறு மாற்றங்களோடு மக்கள் செய்து சுவைக்கிறார்கள். பெரும்பாலும் எந்த வகையில் இதை சமைத்தாலும் இவை அட்டகாசமான சுவையில் தான் இருக்கும். இந்த சூப்பை செய்து முடித்து குக்கர் மூடியை திறக்கும்போது இதன் வாசம் வீட்டில் இருப்பவர்களை தானாக கிச்சனுக்கு கொண்டு வந்துவிடும்.

மட்டன் நெஞ்செலும்பு சூப் செய்யும் முறை

இந்த சூப்பின் ஸ்பெஷல் என்னவென்றால் நெஞ்செலும்பு கறியை நன்கு சுத்தம் செய்து விட்டால் போதும் இதை நாம் மிக எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி குறைந்த நேரத்திலேயே பிரஷர் குக்கரின் மூலம் செய்து விடலாம். அது மட்டுமின்றி மட்டன் நெஞ்செலும்பு சூப்பில் அதிக அளவு கல்சியம் மற்றும் புரதச்சத்து இருப்பதினால் இவை நம் எலும்பு மற்றும் தசைகளுக்கு மிகவும் நல்லது. மேலும் சளி மற்றும் இருமல் இருப்பவர்கள் இதில் சிறிது மிளகு தூள் போட்டு அதிகமாக பருகினால் உடம்புக்கு நன்கு இதமாக இருக்கும்.

இப்பொழுது கீழே இந்த சூப் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

இதை நாம் மிக எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி குறைந்தநேரத்திலேயே பிரஷர் குக்கரின் மூலம் செய்து விடலாம். பிரஷர் குக்கர் இல்லாதவர்கள் சாதரண தாச்சியில் செய்யலாம்.

Pதயாரிப்பு நேரம் 15 mins

சமையல் நேரம் 20 mins

மொத்த நேரம் 35 mins

Course: Soup

மட்டன் நெஞ்செலும்பு சூப் செய்ய தேவையான பொருட்கள்

  • 250 கிராம் நெஞ்செலும்பு கறி
  • 12 to 14 சின்ன வெங்காயம்
  • 1 தக்காளி
  • 4 to 5 பல் பூண்டு
  • 3 to 4 கிராம்பு
  • ¼ மேசைக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1 மேசைக்கரண்டி சோம்பு
  • 1 மேசைக்கரண்டி சீரகம்
  • 1 மேசைக்கரண்டி மிளகு
  • 1 மேசைக்கரண்டி தனியா
  • 1 துண்டு பட்டை
  • 1 பிரியாணி இலை
  • தேவையான அளவு எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு
  • சிறிதளவு வெங்காய பூ
  • சிறிதளவு கருவேப்பிலை
  • சிறிதளவு கொத்தமல்லி

மட்டன் நெஞ்செலும்பு சூப் செய்முறை

  1. முதலில் தக்காளி, ஸ்பிரிங் ஆனியன், கருவேப்பிலை, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, வெங்காயம் மற்றும் பூண்டை தட்டி வைத்து, மட்டன் நெஞ்சு எலும்பு கறியை நன்கு சுத்தம் செய்து கழுவி எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.
  1. பின்பு ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் மிளகு, தனியா, மற்றும் சீரகத்தை போட்டு அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
  2. அடுத்து ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  3. எண்ணெய் சுட்ட பின் அதில் கிராம்பு, பட்டை, சோம்பு, மற்றும் பிரியாணி இலையை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வறுக்கவும்.
  4. அரை நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் சுத்தம் செய்து கழுவி வைத்திருக்கும் மட்டன் நெஞ்செலும்பு கறியை போட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
  5. ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் தட்டி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் பூண்டை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 2 நிமிடம் வரை வதக்கவும்.
  6. 2 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, மஞ்சள் தூள், நாம் அரைத்து வைத்திருக்கும் மிளகு மசாலாவிலிருந்து ஒரு மேஜைக்கரண்டி, கருவேப்பிலை, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
  7. பின்பு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு அதை சுமார் 10 விசில் வரும் வரை வேக விடவும். (சுமார் மூன்று அல்லது மூன்றரை கப் அளவு தண்ணீர் சேர்த்தால் சரியாக இருக்கும்.)
  8. 10 விசில் வந்ததும் குக்கரின் மூடியை திறந்து மட்டன் நெஞ்செலும்பு சூப்பை ஒரு கிளறு கிளறி அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி மற்றும் ஸ்பிரிங் ஆனியனை தூவி அதை எடுத்து ஒரு கின்னத்தில் ஊற்றி சுட சுட பரிமாறவும்.
  9. இப்பொழுது உங்கள் சூடான மற்றும் உடம்பிற்கு மிகவும் சத்தான மட்டன் நெஞ்செலும்பு சூப் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version