லதா மங்கேஷ்கர் காலமானார்

இந்தியாவின் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் 92 ஆவது வயதில், இன்று மும்பையில் காலமானார். இந்திய உயரிய விருதான பாரத ரத்தனா விருது பெற்ற இரண்டாவது பெண் பாடகி இவர். 70 வருடகாலமாக பாடல்களை பாடியுள்ள இவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.

ஹிந்தி, மராட்டி ஆகிய மொழிகளில் அதிகமாக பாடல்களை பாடியுள்ள இவர் தமிழிலும் பாடல்களை பாடியுள்ளார். இந்தியமொழிகள் 35 இலும், சில வெளிநாட்டு மொழி பாடல்களிலும் பாடியிலுள்ளார். “மெலோடி குயின்” என அழைக்கப்படும் இவர், இசை குடும்ப வாரிசாவார்.

அரசியலிலும் ஈடுப்பட்ட இவர் 1999 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராகவும் திகழ்ந்துள்ளார்.

சத்யா திரைப்படத்தில் இடம்பெற்ற “வலையோசை கலகலவென” பாடல் மிகவும் பிரபலமானது.

லதா மங்கேஷ்கர் காலமானார்
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version