குறிப்பாக சிக்கன் கொத்து பரோட்டா, மட்டன் கொத்து பரோட்டா, முட்டை கொத்து பரோட்டா, மற்றும் வெஜிடபிள் கொத்து பரோட்டா மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது முட்டை கொத்து பரோட்டா.
Egg Kothu Parotta / முட்டை கொத்து பரோட்டா
முட்டை கொத்து பரோட்டாவின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை வெறும் 2 அல்லது 3 பரோட்டாக்கள் மற்றும் 4 முட்டை இருந்தால் போதும் மிக எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி வீட்டிலேயே செய்து விடலாம். இதில் பரோட்டாவை செய்வதற்கு தான் சற்று நீண்ட நேரம் பிடிக்கும், ஆனால் அதை செய்வதும் எளிது தான். இருப்பினும் பரோட்டாவை வீட்டில் செய்ய விரும்பாதவர்கள் அதை கடைகளிலிருந்து வாங்கி கொள்ளலாம்.
இப்பொழுது கீழே முட்டை கொத்து பரோட்டா மற்றும் சிக்கன் சால்னா செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
கொத்துபரோட்டாவிற்க்கு இருக்கும் மவுசே தனி தான். கொத்து பரோட்டாவில் பல வகை உண்டு.
Prep Time15 mins
Cook Time15 mins
Total Time30 mins
Course: Main Course
Cuisine: South Indian, Tamil, Tamil Nadu
Keyword: chicken salna, egg kothu parotta
முட்டை கொத்து பரோட்டா சிக்கன் சால்னா செய்ய தேவையான பொருட்கள்
- 3 பரோட்டா
- ½ கிலோ சிக்கன் எலும்பு
- 4 முட்டை
- 4 பெரிய வெங்காயம்
- 4 தக்காளி
- 2 பச்சை மிளகாய்
- 6 பூண்டு பல்
- 1 இஞ்சி துண்டு
- ½ கப் துருவிய தேங்காய்
- 1 பட்டை துண்டு
- 2 ஏலக்காய்
- 3 கிராம்பு
- 2 மேஜைக்கரண்டி பொட்டுக்கடலை
- 1 மேஜைக்கரண்டி மிளகு
- 1 மேஜைக்கரண்டி சோம்பு
- 1 மேஜைக்கரண்டி சீரகம்
- 1 மேஜைக்கரண்டி கசகசா
- 2 பிரியாணி இலை
- ½ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
- 1 மேஜைக்கரண்டி மல்லி தூள்
- 1 மேஜைக்கரண்டி மிளகு தூள்
- தேவையான அளவு மிளகாய் தூள்
- தேவையான அளவு எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
- சிறிதளவு கருவேப்பிலை
- சிறிதளவு கொத்தமல்லி
முட்டை கொத்து பரோட்டா சிக்கன் சால்னா செய்முறை
- முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், 3 பல் பூண்டு, கருவேப்பிலை, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, மற்றும் சிக்கன் எலும்புகளை நன்கு சுத்தம் செய்து கழுவி எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
- பின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் அதில் ஒரு துண்டு பட்டை, ஏலக்காய், கிராம்பு, மிளகு, 2 மேஜைக்கரண்டி சோம்பு, சீரகம், கசகசா, மற்றும் பொட்டுக்கடலையை போட்டு அதை நன்கு வறுக்கவும்.
- அடுத்து அதில் நாம் துருவி வைத்திருக்கும் தேங்காயை போட்டு அது நன்கு பொன் நிறம் வரும் வரை அதை வறுக்கவும்.
- தேங்காய் வறுபட்டதும் அடுப்பை அணைத்து விட்டு அதை இறக்கி கீழே வைத்து சிறிது நேரம் ஆற விட்ட பின்பு அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
- பின்னர் ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 3 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் அதில் ஒரு துண்டு பட்டை, பிரியாணி இலை, மற்றும் ஒரு மேஜைக்கரண்டி சோம்பை சேர்த்து அதை வறுக்கவும்.
- சோம்பு வறுபட்டதும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் 2 வெங்காயம் மற்றும் ஒரு சிட்டிகை அளவு உப்பு சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மல்லி தூள், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மிளகாய் தூள், மற்றும் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
- பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் 2 தக்காளியை போட்டு தக்காளி வதங்கியவுடன் அதில் நாம் சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கன் எலும்பு சேர்த்து அது நன்கு மசாலாவுடன் சேருமாறு அதை நன்கு கிளறி விடவும்.
- பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மூடி போட்டு சிக்கன் எலும்பு நன்கு வேகும் வரை அதை வேக விட்டு பின்பு அடுப்பை அணைத்து விட்டு அதை அப்படியே வைத்து கொள்ளவும்.
- பின்பு கடையில் வாங்கின அல்லது வீட்டிலே செய்த பரோட்டாவை எடுத்து அதை சிறு சிறு துண்டுகளாக நம் கைகளின் மூலம் பிய்த்து ஒரு கிண்ணத்தில் போட்டு வைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பூண்டு, பச்சை மிளகாய், மற்றும் சிறிதளவு கருவேப்பிலையை போட்டு அதை நன்கு கலந்து விட்டு பூண்டின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
- பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, தேவையான அளவு உப்பு, அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள், மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு மிளகு தூள் சேர்த்து நன்கு கிளறி விட்டு தக்காளி நன்கு வதங்கும் வரை அதை வதக்கவும்.
- தக்காளி நன்கு வதங்கியதும் pan ன் நடுவே ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதில் 2 முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து விட்டு அதை தக்காளியுடன் சேர்த்து கிளறி விடவும்.
- பின்னர் அதில் நாம் சிறு சிறு துண்டுகளாக ஆக்கி வைத்திருக்கும் பரோட்டாவை போட்டு நன்கு கிளறி விடவும்.
- பின்பு அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து நாம் செய்து வைத்திருக்கும் சிக்கன் சால்னாவுடன் அதை சுட சுட பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான முட்டை கொத்து பரோட்டா மற்றும் சிக்கன் சால்னா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.