டொலருக்கு பற்றாக்குறையில்லை – மத்திய வங்கி ஆளுனர்

நாட்டில் டொலர் பற்றாக்குறை இல்லையென மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஆளுனர் இதனை தெரிவித்துள்ளார்.

இறக்குமதி உட்பட அனைத்து செயற்பாடுகளுக்கும் தேவையான அளவு டொலர் கையிருப்பில் உள்ளதாக மத்திய வங்கி ஆளுனர் தெரிவித்துள்ளதுடன்,

டொலர் பற்றாக்குறை இருக்குமெனில், கடந்த ஆண்டினுள் 22 பில்லியன் அமெரிக்க டொலருக்கு பொருட்களும், கடந்த மாதம் 2 பில்லியன் அமெரிக்க டொலருக்கு பொருட்களும் எவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டது என அவர் கேள்வி எழுப்பினார்.

டொலர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமைக்கு காரணம் டொலர் இல்லாமை அல்ல என தெரிவித்த அவர் டொலருக்கான கேள்வி அதிகரித்தமையே காரணம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிகமாக டொலர்களை சம்பாதித்து கொள்வதற்கு மாற்று வழிகளையும், செயற்பாடுகள் குறித்தும் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என ஆளுனர் மேலும் தெரிவித்தார்.

டொலருக்கான கேள்வி அதிகரிப்பானது தவறான ஒன்றல்ல எனவும், கொள்வனவை குறைப்பது அல்ல அதற்கான தீர்வு டொலர்களை சம்பாதிப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றுவதே சிறந்த தீர்வு என மத்திய வங்கி ஆளுனர் இதன்போது தெரிவித்தார்.

டொலருக்கு பற்றாக்குறையில்லை - மத்திய வங்கி ஆளுனர்

Social Share

Leave a Reply