யாழ்ப்பாணம். அராலி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் விபத்துக்குளாகியதில் 22 வயது இளைஞன் பலியாகியுள்ளார்.
அதிக வேகம் காரணமாக, கடும் மழை பெய்துவரும் நிலையில் ஆபத்தான வளைவில் மோட்டார் சைக்கிள் சறுக்கியதியில் விபத்து ஏற்பட்டுளளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்தில் வட்டுக்கோட்டையை சேர்ந்த கந்தசாமி நிரோஜன் எனும் இளைஞன் உயிரிழந்த அதேவேளை, வசந் என்ற 20 வயது இளைஞன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்காலத்தில் மோட்டார் சைக்கிள் விபத்துகள் மிகவும் அதிகரித்துள்ளன. குறிப்பாக வட மாகாணத்தில் மோட்டார் சைக்கிள் விபத்துகள் நிறைந்து போயுள்ளன. அவதானமற்ற முறையில் மோட்டார் சைக்கிளை ஓட்டுவது, வீதி விதிமுறைகளை உரிய முறையில் பின்பற்றாமை, அதிக வேகம் என்பன முக்கியமான காரணங்களாக அமைத்துள்ளன. இளைஞர்கள் அதிகமாக மோட்டார் சைக்கிள்களில் சாகசமான முறையில் ஓட்டுவதும் இந்த விபத்துகளுக்கு காரணமாக அமைந்துள்ளது.
மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் அவதானமாக ஓட்டவேண்டியதுடன், இளைஞர்களின் மோட்டார் சைக்கிளோட்டம் தொடர்பில் பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும். அத்தோடு அவர்களுக்குரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்.