ஆடை தொழிற்சாலைகளில் பெண்களின் முன்னேற்றம்

இலங்கை பொருளாதாரத்தில் பாரியளவில் பெண்கள் கைகொடுக்கின்றனர். ஆடை உற்பத்தி மற்றும் தேயிலை உற்பத்தி ஆகிய இரண்டிலும் பெண்களின் பங்கே மிக அதிகம். இலங்கைக்கான வருமானம் அதிகமாக கிடைக்கும் துறைகளும் இவை இரண்டுமே.

ஆடை உற்பத்தியில் பெண்களே மிக பெரியளவில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் ஒமேகா லைன் வவுனியா ஆடை தொழிற்சாலையில் 90 சதவீதத்துக்கும் அதிமானவர்கள் பெண்களே வேலை செய்கிறார்கள். பெண்களுக்கான தொழிற்சாலையென்றே இந்த தொழிற்சாலையினை கூற வேண்டும்.

ஆடை தொழிற்சாலைகளின் பின்னரே இலங்கையில் அதிகளவிலான கீழ் மட்ட குடும்பங்கள் வளர்ச்சி காண ஆரம்பித்தன. பெண்கள் வேலைக்கு போவதற்கான வாய்ப்பு இதன் மூலம் உருவாக்கப்பட்டது. ஆடை தொழிற்சாலைக்கு வேலைக்கு போவது வருவாயை அதிகரிப்பது முக்கியத்துவமானது. ஆனால் எங்கே,எவ்வாறான வேலைக்கு போகிறோம் என்பது முக்கியமானது.

வெறுமனே வேலைக்கு போய் வந்து சம்பளத்தை மட்டுமே வாங்கினால் போதுமா? வேலை செய்யுமிடத்தில் திருப்தியிருக்க வேண்டும். ஏற்றங்கள் இருக்க வேண்டும். முன்னோக்கி செல்ல வேண்டும். அப்போது போட்டி போட்டு வேலை செய்ய மனம் தூண்டும். சலிப்பில்லாத வேலையே அனைவரையும் உயாத்தி நிற்கும்.

அவ்வாறான ஒரு வேலை சூழலை வழங்குகிறது ஒமேகா லைன் வவுனியா. அங்கு கடமையாற்றிவரும் சிற்றம்பலம் பிரதீபா 10 வருடங்களை அண்மித்துள்ளார். ஒரு சகாப்தத்தினை முன்னேற்றத்துடன் பூர்த்தி செய்துள்ளார். அவருடைய அனுபவங்களை அவர் பகிரும் போது, வெளிநாடு செல்வதென்பது தொடர்பில் நினைத்து கூட பார்க்காதவர் ஒமேகா லைன் இத்தாலி நிறுவனத்த்துக்கு சென்று பயிற்சி பெற்று வந்ததனை வாழ் நாள் சாதனையாக கருதுகிறார்.

ஆடை தொழிற்சாலைகளில் பெண்களின் முன்னேற்றம்

“10 வருடங்களுக்கு வருடங்களுக்கு முன்பு வேலை வாய்ப்புகளுக்காக காத்திருந்த வேளையில் இத்தாலியில் தலைமையகத்தை கொண்ட ஆடைத்தொழிற்சாலை ஒன்று, ஒமேகா லைன் என்ற பெயரில் நீர்கொழும்பில் தலைமையகமாக கொண்டு இயங்கி வருவதாகவும் அதன் தொழிற்சாலை ஒன்று வவுனியாவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், பிரதேச சபையின் ஊடாக அறிய முடிந்தது. இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர வேண்டுமென்றால் நீர்கொழும்பு தலைமயக்கத்தில் பயிற்சி பெறவேண்டும் எனவும் அறிய முடிந்தது.

நான் வேலை செய்ய வேண்டும். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என பல கனவுகளுடனும் சிறு பதற்றத்துடனும் நேர்முகத் தேர்வில் பங்கு பற்றினேன். எமக்கு நேர்முகத் தேர்வு நடத்துவதற்காக இத்தாலி தலைமையகத்திலிருந்து இத்தாலி நாட்டவர்கள் வருகை தந்திருந்தார்கள் அவர்களுடன் மொழிப்பெயர்ப்பு செய்வதற்கு ஒரு உதவியாளரும் வருகை தந்திருந்தார். மொழி பிரச்ச்நினை இருக்குமென நானும் என்னோடு இணைந்தவர்களும் பயந்தோம். ஆனால் அவ்வாறு எந்த சிக்கல்களும் எமக்கு இருந்ததில்லை.

நான் எனது வேலையை 2012ம் ஆண்டு ஒமேகா லைன் குடும்பத்துடன் இணைந்து ஆரம்பித்து. இன்றுடன் 9 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள போதிலும்இன்று வரையில் இனம் , மதம், மொழி, கடந்து அனைவரும் சகோதர, சகோதரிகளாக அன்புடனும் ,சமத்துவத்துடனும் பணி புரிந்து வருகின்றோம்.

ஏமது நிறுவனத்தில் நான் பணிக்கு அமர்த்தப்பட்ட போது சாதாரண மெஷின் ஒப்பரேட்டர் ஆகவே சேவையை ஆரம்பித்தேன். வேலையை ஆரம்பித்த போது எனக்கு தையல் பற்றிய எந்த விதமான முன் அனுபவமோ பயிற்சியோ இருக்கவில்லை. எமது நிறுவனத்தால் வழங்கப்பட்ட பயிற்சியின் மூலமாக தையல் பற்றிய அறிவும் அனுபவமும் எனக்கு கிடைத்தது. இவற்றை வைத்து படிப்படியா முன்னேறி நான் தற்போது ஒமேகா லைன் குடும்பத்தில் தொழில்நுட்பவியலாளராக (Technician) ஆக பணியாற்றி வருகின்றேன்.

ஒமேகா லைன் நிறுவனத்தில் இணையும் போது கல்வி தொடர்பில் அதிகம் கவலை கொள்ள தேவையில்லை. எனக்கு அவ்வாறான பயம் இருந்தது. நான் இந் நிறுவனத்தில் இணையும் போது எனக்கு வயது 20. சாதாரணமாக 20 வயதினை உடையவர் எந்த கல்வித்தகமையை கொண்டிருப்பாரோ அத்தகமைகளையே நானும் கொண்டிருந்தேன்.

ஆனால் எமது நிறுவனத்தினால் எமது தொழில் திறன் மற்றும் கல்வித்தகமைகளை மேம்படுத்தும் நோக்கில் எனக்கு ஆங்கிலம், சிங்கள மொழிகள் கற்பிக்கப்பட்டன. பாடநெறிகள், தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் நோக்கில் கணினி பாட நெறியும் இலங்கை புடவை மற்றும் ஆடை நிறுவகம் (SLITA ) நிறுவனத்தில் டிப்ளமோ பாடநெறியும் பயிற்றுவிக்கப்பட்டது. நான் தற்போது கல்வி, தொழில்நுட்ப அறிவில் தேர்ச்சியடைந்துள்ளேன்.

நான் தற்போது வளர்ந்து வரும் இந்த சமூகத்தில் கல்வி தேர்ச்சியுடையவளாக மாற்றப்பட்டுள்ளேன். தனியே ஒமேகா லைன் எமக்கு தொழிலை மட்டும் வழங்காமல் சமூகத்தில் அந்தஸ்து ஒன்றையும் ஏற்படுத்தி தந்துள்ளது. அது மட்டுமல்லாமல் எனது தொழில் சம்பந்தமான அறிவை புகட்டுவதற்காக இலவசமாக வெளிநாட்டு பயிற்சிகளும் வழங்கியுள்ளனர்.

எமது நிறுவனத்தின் தலைமையகம் இத்தாலி நாட்டின் வெரோனா நகரில் அமைந்துள்ளது. ஆகையால் எமது நிறுவனத்தின் கட்டமைப்புக்களும் வசதிகளும் சர்வதேச நிறுவனத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனை நேரடியாக சென்று பார்த்தவள் என்ற ரீதியில் உணர்ந்து கொண்டேன். வவுனியாவின் தொழிற்ச்சாலைக்கும், இத்தாலியின் தொழிற்சாலைக்கு வித்தியசங்கள் எதுவுமில்லை.
இங்கே வேலை செய்வது கூட வெளிநாட்டில் வேலை செய்யும் உணர்வினையே ஏற்படுத்துகிறது.

இங்கே இலவசமகா, பாதுகாப்பான போக்குவரத்து வசதிகள் வழங்கப்படுகின்றன. காலையில் பேரூந்தில் ஏறினால் மாலை வீடு செல்லும் வரை எமது நிறுவனமே எமது பாதுகாப்புக்கு உத்தரவாதமாக உள்ளது. இதனை விட பாதுகாப்புக்கு வேற என்ன வேண்டும்?

இலவச சத்துள்ள, நல்ல உணவுகள் வழங்கப்படுகின்றன. இலவச சீருடை, பண்டிகை கொடுப்பனவுகள், வருடாந்த மேலதிக கொடுப்பனவு(போனஸ்), இலவச மருத்துவ வசதிகள் எமது நிறுவனத்தினால் வழங்கப்பட்டு வருகின்றன. எமது நிறுவனமானது நிறுவனத்தில் வேலை செய்யும் எங்களுக்கு மட்டும் சலுகை வழங்குவதோடு நின்றுவிடாமல், ஊழியர்களின் குடும்பங்களையும் கவனத்தில் கொண்டு செயற்பட்டு வருகின்றது.
எமது பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ ஒதுக்கீடுகள், இலவச மருத்துவ முகாம்கள், சிறார்கள் மற்றும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் புலமை பரிசில் திட்டங்கள் மற்றும்; சாதாரண தரத்தில் (O /L ) சித்தியடைவோருக்கு நிதி ஒதுக்கீடுகளும் வருடாந்த விளையாட்டு நிகழ்வுகளும் வழங்கி வருகின்றார்கள்.

எமது நிறுவனத்தில் ஊழியர்களுக்கான காப்பீடு வசதிகளும் உள்ளன. என்னை பொறுத்த வரையில் நிறுவனங்கள் ஊழியர்களை கவனத்தில் கொள்வதே பெரிய விடயமாகும். ஆனால் எமது நிறுவனமானது எம்மையும் எங்கள் குடும்பங்களையும் சிரத்தில் கொண்டு செயற்படுகிறது என்பதை கூற மிகவும் பெருமிதமாக உள்ளது.நான் எனது வேலை நேரத்தில் எனது வேலையை சரியாகவும் திருப்திகரமாகவும் , மகிழ்ச்சியாகவும் செய்வதற்கு அனைத்து வசதிகளையும் இந் நிறுவனம் ஏற்படுத்தி தருவதனால் எனது வீட்டையும் வேலையையும் சமநிலையில் பேணுவதற்கு ஏதுவாக உள்ளது. இதனால் இக்குடும்பத்தில் எனது சேவையை தொடர்ச்சியாக ஆற்ற விரும்புகின்றேன்.

வறுமை கோட்டின் கீழும் நடுத்தரமான நிலையிலும் வாழும் எமது அன்பார்ந்த சகோதரிகளின் வாழ்க்கைத்தரம் உயர்வடைவதற்கு ஒமேகா லைன் வவுனியா அப்பரேல்ஸ் சிறந்த சந்தர்ப்பத்தினை வழங்குகின்றது. எமது நிறுவனமானது இலவச போக்குவரத்து உணவு மற்றும் மருத்துவ சலுகைகளை வழங்கி எமது செலவுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் சேமிப்பினை உறுதிப்படுத்தி நிதி சார்ந்த பாதுகாப்பை வழங்குகின்றது. உழைக்கின்ற பணத்தினை சேமித்து எமது குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய இலகுவாகவுள்ளது.

எமது நிறுவனமானது வேலையையும் எம் , குடும்ப வாழ்க்கையையும் எவ்வாறு சமநிலையில் பேணுவது என்பது பற்றியும் எமக்கு பல்வேறு விதமான பயிற்சிதிட்டங்களை வழங்குகின்றது. எனக்கு கிடைக்கும் விடுமுறை நாட்களில்; எனது நேரத்தை குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக கழிக்கின்றேன் மேலும் எமது குடும்பத்தினர் நோய்வாய் படும் போது அருகில் இருந்து ஆறுதல் கூறி இயலாமையை வெளிப்படுத்துவது காட்டிலும் நாம் தினமும் வேலைக்கு சென்று சேமித்த பணத்தினை கொண்டு எமது குடும்பத்தினரை ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ள முடியும்

நான் நேரில் பாத்து, தினம் தினம் அனுபவித்து வரும் வியங்களே இவை. நான் இன்னும் இன்னும் முன்னேற எனக்கு இங்கே நல்ல எதிர்காலம் உளளதாகவும், வேலை பாதுகாப்பு உள்ளதாகவும் நான்
உணர்கிறேன். எனது அனுபவங்களை போலவே உங்கள் அனுபவங்களையும் மாற்றிக்கொள்ள நீங்களும் ஒமேகா லைன் வவுனியாவுடன் இணையுங்கள்.

வாழ்க்கையில் முன்னோக்கி நகர்வதோடு, வாழ்க்கை தரத்தையும் உயர்த்தலாம். ஆடை துறையானது எமது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பாரிய பங்களிப்பினை வழங்குவது நாம் அனைவரும் அறிந்ததே! அந்த வகையில் எனது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் எனது பங்களிப்பும் காணப்படுவதில் நான் பெருமை அடைகிறேன்.

உண்மையான உழைப்பு மற்றும் அற்பணிப்பின் மூலம் ஆகாயத்தையும் தாண்டி வெற்றியை எமதாக்கலாம். இத்தாலி நாட்டில் இருக்கும் எமது நிறுவனத்தின் தலைமையகத்தை நேரில் சென்று பார்வையிடும் வாய்ப்பினை நான் பெற்று இருந்தேன். எனவே நீங்களும் உங்கள் கனவை நனவாக்க ஒமேகாவின் வவுனியா அப்பரேல்சுடன் இணைந்து கொள்ளுங்கள்.

சிற்றம்பலம் பிரதீபா, தன் அனுவத்தை இங்கே பகிர்ந்ததன் மூலம் தனது முன்னேற்றங்களை வெளிப்படுத்தியுள்ளார். வாழ்க்கையில் முன்னேறவே தொழில் கைகொடுக்கின்றது. இங்கே அந்த தொழில் வாழ்க்கை தரத்தையும் முன்னோக்கி நகர்த்த உதவுகின்றது. ஆடை தொழிற்சாலைகள் இலங்கையில் முன்னேற்றத்தினை நோக்கியதாகவே நகர்ந்து செல்கிறன. யார் நல்ல சலுகைகளை வழங்குகிறார்கள். யார் நல்ல முறையில் தமது ஊழியர்களை பாதுகாப்பாக தங்கள் கைகளுக்குள் வைத்து தங்குகிறார்கள் என்பதிலேயே தொழிலார்கள் அந்த இடங்களில் தொழில் புரிகின்றனர்.

ஒரு ஊடகமாக, ஒமேகா லைன் வவுனியா தொழிற்சாலையின் வேலையிடங்களை பார்வையிட கிடைத்தது. அங்கு தொழிலார்களுக்கான சலுகைகள் சிறப்பாக வழங்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று காலங்களிலும் முழுமையான பாதுகாப்பினை இந்த தொழிற்சாலை உறுதி செய்துள்ளது. பூரண பாதுகாப்பு உள்ளது. வேலை செய்யும் அநேகமானவர்கள் மூன்று தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர். கொரோனா தடுப்பு தொடர்பில் நிறுவனம் மிகவும் சிரத்தையுடன் செயற்பட்டு வருகின்றது.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஒமேகா லைன் வவுனியாவில் கலாச்சரம் சீராக பேணப்படுகிறது. கலாச்சார ரீதியான பாதுகாப்பும் இங்கே காணப்படுகிறது. பெண்கள் எந்தவித பயமுமின்றி வேலை செய்யும் சூழல் காணப்படுகிறது. பெற்றோரும், குடும்பத்தினரும் பிள்ளைகளை பயமின்றி இங்கே வேலைக்கு அனுப்ப கூடிய சூழ்நிலையும் காணப்படுவது முக்கிய விடயமாகும்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version