லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் பெற்றோல் மற்றும் டீசலுக்கான விலையினை ஏற்றியுள்ளது. டீசல் 1 லீட்டர் 15 ரூபாவினாலும், பெற்றோல் 20 ரூபாவினாலும் நேற்று நள்ளிரவு முதல் விலையேற்றப்பட்டுள்ளது.
புதிய விலைகளாக பெற்றோலின் விலை 204 ரூபாவாகவும், டீசலின் விலை 139 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளன.
இந்த மாதத்தில் இரண்டாம் தடவையாக LIOC விலை ஏற்றத்தை செய்துள்ளது. சர்வதேச சந்தையில் மசகு எண்ணையின் விலையேற்றம் இதற்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.
யுக்ரைன் – ரஸ்சியா மோதல் காரணமாக எரிபொருள் விலையேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக ஏற்கனவே எதிர்வு கூறப்பட்டு வந்தது.
நேற்று(25.02) இலங்கையில் பல இடங்களில் மக்கள் வரிசையில் நின்று வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பியமை சுட்டிகாட்டத்தக்கது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இதுவரையில் விலையேற்றம் தொடர்பில் எந்த அறிவிப்புகளையும் மேற்கொள்ளவில்லை.
ஆனால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விலையேற்றத்தை மேற்கொள்ளவேண்டிய கட்டாயத்திலுள்ளது. மக்கள் மீதான சுமையினை ஏற்றாமல் இருக்க வேண்டுமென்ற எண்ணத்தில் அரசாங்கம் விலையேற்றத்தை மேற்கொள்ள முனையவில்லை என்பது அனைவருக்கும் வெளிப்படையான உண்மையே. ஆனாலும் அரசாங்கம் தொடர்ந்தும் விலையேற்றத்தை மேற்கொள்ளாமல் தொடர்வதும் சந்தேகமே.