மூன்று தடுப்பூசிகளையும் ஏற்றியிருந்தால் ஐக்கிய அரபு இராட்சியத்துக்கு செல்ல பி.சி.ஆர் பரிசோதனை செய்ய தேவையில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் இதனை அறிவித்துள்ளார். இதுவரையும் தடுப்பூசிகளை பெற்றிருந்தாலும் பி.சி.ஆர் பரிசோதனை செய்தால் மட்டுமே ஐக்கிய அரபு இராட்சியத்துக்கு செல்ல முடியுமென்ற கட்டுப்பாடு காணப்பட்டது.
இந்த நிலையியிலேயே மூன்று ஊசிகளையும் ஏற்றிக்கொண்டவர்கள் எந்தவித பரிசோதனையும் இல்லாமல் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் பயணிக்க முடியுமென்ற அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
