இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டவது 20-20 போட்டி இன்று (26/02) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா அணி 07 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 183 ஓட்டங்களை பெற்றது. இதில் பத்தும் நிசங்க 75 ஓட்டங்களையும், தசுன் ஷானக 47 ஓட்டங்களையும், தனுஷ்க குணதிலக 38 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா, ஹர்ஷால் படேல், யுஸ்வேந்ர சஹல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
184 என்ற வெற்றி இலக்கோடு துடுப்பாடிய இந்தியா அணி 17.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 18 ஓட்டங்களை பெற்றது. இதில் ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 74 (44)ஓட்டங்களையும், சஞ்சு சம்சன் 39(25) ஓட்டங்களையும், ரவீந்தர் ஜடேஜா ஆட்டமிழக்காமல் 45 (18) ஓட்டங்களையும் பெற்றனர். . பந்துவீச்சில் லஹிரு குமார 2 விக்கெட்களையும், துஷ்மந்த சமீர 01 விக்கெட்டினையும் கைப்பற்றினார்கள்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா தொடரை 2-0 என வெற்றி பெற்றுள்ளது.
