இலங்கை தேசிய கால்பந்து அணியின் வீரரான மன்னரை சேர்ந்த டக்ஸன் பியூஸ்லஸ் தற்கொலை செய்து இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலைதீவின் கழக மட்ட அணிகளுக்கிடையிலான போட்டியில் பங்குபற்றுவதாற்காக மாலைதீவு சென்றிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார். மாலைதீவு ஊடகங்கள் மூலமாக இந்த செய்தி வெளியாகியிருந்தது.
பியூஸ்லஸ் சிறந்த வீரராக திகழ்ந்தவர் என்பதும், அவர் தற்கொலை செய்யக்கூடிய மனநிலை உடையவர் அல்ல எனவும், இது தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை எனவும் அவரது நண்பர்கள் தெரிந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.
சில வருடங்களுக்கு முன்னர் இலங்கை அணிக்காக விளையாடிய மன்னரை சேர்ந்த கால்பந்து வீரர் கெமிலேஸ் தற்கொலை செய்தமை நினைவு கூரக்கூடிய விடயமாக அமைந்துள்ளது.
