இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தடுப்பூசிகளை முழுமையாக பெற்றிருந்தால் PCR பரிசோதனை அல்லது அன்டிஜன் பரிசோதனை செய்ய தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரவுள்ளதாக சிவில் போக்குவரத்து விமான அதிகார சபை தலைவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இலங்கை வரும் பயணிகள் தடுப்பூசிகளை முழுமையாக பெற்றிருந்தால் கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழை வழங்க தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பகுதியளவில் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்கள், 72 மணியத்தியாலத்துக்கு முன்னர் பெறப்பட்ட PCR அல்லது அன்டிஜன் பரிசோதனை செய்து கொரோனா தொற்றில்லை என்பது உறுதி செய்யபபடவேண்டும் என சிவில் போக்குவரத்து விமான அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
முழுமையாக தடுப்பூசிகளை பெற்று 14 நாட்களுக்கு உட்பட்டவர்கள் மற்றும் மூன்று மாதங்களில் கொவிட தொற்றுக்குள்ளானவர்கள் இனி பரிசோதனைகள், தனிமைப்படுத்தல்கள் இன்றி உடனடியாக விமான நிலையத்திலிருந்து வெளியேற முடியும்.
தடுப்பூசிகள் பெறாத இலங்கையை சேர்ந்தவர்கள், இரட்டை பிரஜா உரிமையுடையவர்கள், வதிவிட விசா உடையவர்கள் விமான நிலைய தனிமைப்படுத்தல் நிலையத்தில் PCR பரிசோதனை செய்துகொண்டு முதல் நாள் அங்கீகரிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் விடுதியில் (ஹோட்டல்) ஒரு நாள் தங்கிய பின்னர் 14 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு அனுப்ப படுவர்.
தடுப்பூசிகள் பெறாத வெளிநாட்டவர்கள், அங்கீகரிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் விடுதியில் (ஹோட்டல்) PCR பரிசோதனை செய்து ஒரு நாள் தங்கிய பின்னர் 14 நாட்கள் அங்கீகரிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் விடுதியில் (ஹோட்டல்) தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.
