யுக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான கார்க்கிவ் நகரத்தை இன்று ரஸ்சியா படையினர் கைப்பற்றியுள்ளனர். யுக்ரைனின் தலைநகரான கிவ் நகரை கைப்பற்றும் நோக்கோடு தொடர்ந்தும் ரஸ்சியா படையினர் நகர்ந்து செல்கின்றனர். கடுமையான யுக்ரைனின் பதிலடிக்கு மத்தியில் ரஸ்சியா இராணுவம் யுக்ரைனின் கார்க்கிவ் பகுதியினை கைப்பற்றியுள்ளது.
கார்க்கிவ் பகுதியில் 15 இலட்சம் மக்களுக்கு அதிகமானவர்கள் வாழ்கின்றர்னர்.
ஆனாலும் அந்த பகுதியில் கடும் யுத்தம் நடைபெற்றுவருவதாக இங்கிலாந்தின் பாதுகாப்பு துறையினை மேற்கோள் காட்டி பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.
இதுவரை 2 லட்சம் மக்கள் யுக்ரைனை விட்டு அகதிகளாக அண்டைய நாடுகளுக்கு செட்ன்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுவரையில் குறைந்தது 64 பொதுமக்கள் கொள்ளப்பட்டுள்ளதாகவும், நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
கிவ் நகர பகுதி மக்களுக்கு முடிந்தளவு ரஸ்சியா படையினரின் முன்நகர்வு பணிகளை தடை செய்ய முயற்சிக்குமாறு யுக்ரைனின் இராணுவம் அறிவுறுதிதியுள்ளது. பொதுமக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டுமுள்ளன.
வீதி சமிக்கைகளை மாற்றி விடுதல், மரங்களை வீதிகளில் வீழ்த்தி விடுதல், வீதிகளை போக்குவரத்து மார்க்கங்ககளை சேதப்படுத்தி விடுதல், வீடுகளிலேயே போருக்கான உபகரணங்களை தயார் செய்து தடைகளை ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைளை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதன் ஒரு கட்டமாக டாங்கிகள் செல்லும் வழியில் நீண்ட தொடராக மக்கள் வீதிகளில் நடந்து செல்லும் வீடியோ காட்சி ஒன்றும் பதிவு செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.
யுக்ரைனின் தலைநகர் கிவ் பகுதியினை ரஸ்சிய படையினர் கைப்பற்ற முடியாதவாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாவும், அதற்கான வாய்ப்பு வழங்கப்படமாட்டாது எனவும் கிவ் நகர தலைவர் தெரிவித்துள்ளார்.
ரஸ்சியாவின் இந்த போரை எதிர்த்து உலக நாடுகள் ரஸ்சியா மீது பல தடைகளையும் ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக பல விமானங்களை நாடுகள் இரத்து செய்துள்ளன. ஜுடோ சங்கம் ரஸ்சியா ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் கெளரவ தலைவர் பதவியினை இரத்து செய்துள்ளது. புட்டின் ஜுடோவில் கருப்பு பட்டியினை கொண்டவர்.
ரஸ்சியா தன் மீது தடைகளை மேற்கொள்ளும் நாடுகள் மீதும், தமக்கு எதிராக செயற்படும் நாடுகளுக்கு எதிராகவும் தனது நடைவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. போட்டி போட்டுக் கொண்டு பொருளாதார தடைகள், பயணத்தடைகள் விதிப்பதினால் உலக பொருளாதரத்தில் பாரிய அடி விழ ஆர்மபித்துள்ளதாக ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையானது இலங்கை போன்ற தங்கி வாழும் நாடுகளுக்கு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடையினை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.