இருட்டில் வாழ்வதா? அரசாங்கம் முடிவெடுக்க வேண்டும் – கம்பன்பில

இருட்டில் வாழ்வதா? அல்லது அப்பில்,ஒரேஞ்,கிரேப்ஸ் சாப்பிடுவது முக்கியமாவென அரசாங்கம் முடிவெடுக்க வேண்டுமென எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

எரிபொருள்,மருந்து பொருட்கள் தட்டுப்பாடு நிலவும் நிலையில் நீர்,அப்பில்,ஒரேஞ்,கிரேப்ஸ் போன்ற அத்தியாவசியமற்ற உணவு பொருட்கள் இறக்குமதி செய்யபப்ட்டுள்ளதாக அவர் அரசாங்கம் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.
தேனை இறக்குமதி செய்துள்ளோம். ஆனால மருந்து பொருட்கள் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேவையற்ற செலவினங்களைக் குறைத்து, சிக்கனமாக நிர்வாகம் செய்தால், தடையின்றி எரிபொருளை வழங்குவதை உறுதிசெய்யும் திறன் நம்மிடம் உள்ளது. அதன் மூலம் நாடு தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்ய முடியும் என உதய கம்மன்பில நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

நாடு எதிர்கொள்வது மின்சார நெருக்கடியோ அல்லது எரிபொருள் நெருக்கடியோ அல்ல, மாறாக அந்நியச் செலாவணி நெருக்கடிதான் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இருட்டில் வாழ்வதா? அரசாங்கம் முடிவெடுக்க வேண்டும் - கம்பன்பில

Social Share

Leave a Reply