7 1/2 மணி நேரம் மின் தடை

நாளை (03.02) 7 1/2 மணி நேரத்துக்கான மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுசேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் இதற்கான அனுமதியினை இலங்கை மின்சாரசபைக்கு வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

காலையில் 5 மணி நேரத்துக்கான மின் தடையும், மாலையில் 2 1/2மணி நேரத்துக்கான மின் தடையும் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தியினை செய்வதில் சிக்கல் நிலைகள் ஏற்பட்டுள்ளதனால் மின் தடைக்கான நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழுக்கள் E, T, U, V, மற்றும் W ஆகிய இடங்களில் 8 மணி முதல் 1 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை மின் தடை அமுல் செய்யப்படவுள்ளது.

குழுக்கள் F, P, Q, R, மற்றும் S ஆகிய பகுதிகளில் மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரையும் இரவு 8.30 மணி முதல் 11 மணி வரை அமுல் செய்யப்படவுள்ளது.

மின் தடைக்கான குழுக்களும் இடங்களும் கீழுள்ளன

7 1/2 மணி நேரம் மின் தடை

Social Share

Leave a Reply