ஐக்கிய அரபு இராட்சியத்தின் நிறுவனம் ஒன்றிலிருந்து பெற்றோல் இறக்குமதி செய்வதற்கான அனுமதியினை அமைச்சரவை வழங்கியுள்ளது.பெப்ரவரி 15 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 14 ஆம் திகதி வரையான 8 மாதங்களுக்கு இந்த இறக்குமதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
QQ எனும் நிறுவனத்திடமிருந்து 18 லட்சம் பரல்கள் 92 ஆம் இலக்க ரக பெற்றோல் கொள்வனவு செய்யப்படவுள்ளது. அரசாங்க ஏலத்தின் அடிப்படையில் நிரந்தர மற்றும் தற்காலிக விநியோக நிறுவனக்களிடம் இருந்து கோரப்பட்ட விலை மனுவின் அடிப்படையில் இந்த நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பெற்றோல் இறக்குமதியின் மூலம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பெற்றோல் தட்டுப்பாடு நிலைமை குறைவடையும் என நம்பப்படுகிறது.