யுக்ரைன் தலைநகர் நோக்கிய ரஸ்சியா இராணுவத்தினரின் படையெடுப்பு மேலும் உக்கிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.யுக்ரைன் தலைநகரை நோக்கி நீண்ட வரிசையில் ஆயுதங்கள் தாங்கிய போர் வாகனங்கள் செல்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்திமதி புகைப்படத்தின் மூலம் உறுதி செய்து செய்திகளை வெளியிட்டுள்ளன.
இந்த வாகன தொடரணி 40 மைல் நீளமாக உள்ளதாகவும் மேலும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று நடைபெற்ற ஏவுகணை தாக்குதலில் கிவ் நகரின் தொலைக்காட்சி சேவையின் ஒளிபரப்பு கோபுரம் சேதமடைந்துள்ளது. இந்த தாக்குதலில் ஐந்து பேர் மரணமாகியுள்ளனர். அத்தோடு தொலைக்காட்சி சேவையின் ஒளிபரப்பு சாதனங்களும் பலத்த சேதமாகியுள்ளன. அதன் காரணமாக தொலைக்காட்சி சேவை வழமைக்கு திரும்ப நீண்ட நாட்கள் எடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஸ்சியா தாக்குதல் தலைநகரை நோக்கி கடுமையாக இருக்குமெனவும், குறிப்பாக கிவ் நகரின் தொழிநுப்ட நிலையங்களை ரஸ்சியா தாக்கவிருப்பதாகவும் ரஸ்சியா எச்சரிக்கை விடுத்துள்ளதோடு அவ்வாறான இடங்களுக்கு அருகிலிருக்க வேண்டாமெனவும், அவதானமாக இருக்குமாறும் மக்களுக்கு அறிவித்தல். வழங்கியுள்ளனர்.
உலக நாடுகள் தொடர்ந்தும் ரஸ்சியாவுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கடும் பொருளாதார தடைகளை ஏற்படுத்தி வருகின்றன. மறுபக்கமாக யுக்ரைனுக்கு பல உதவிகளையும் வழங்கி வருகின்றன.
ரஸ்சியா கடும் உணவு தட்டுப்பாட்டுக்கு உள்ளாகியுள்ளதாக அமெரிக்க செய்தி சேவை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறான கடும் எதிர்ப்புகளை எதிர்நோக்கி வருகின்ற பொதும் ரஸ்சியா தனது இராணுவ நடவடிக்கையினை குறைப்பதாக இல்லை. மாறாக இன்னமும் தமது நடவடிக்கையினை அதிகப்படுத்தி வருகிறது.