இன்று 7 1/12 மணி நேரத்துக்கான மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த விடயத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமுல்படுத்தப்பட்டுள்ள மின்தடையினை உடனடியாக நிறைவுக்கு கொண்டுவரும் வகையில் தான் நடவடிக்கை எடுப்பதாக பொது சேவைகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக அதன் தலைவர் ஜனக ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியும், திறைசேரியும் எரிபொருள் சிக்கலை நிறைவுக்கு கொண்டுவந்து, மின்சார உற்பத்திக்கான பிறப்பாக்கிகளை சீராக இயக்க உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஜனாதிபதி பல தடவை எரிபொருள் சிக்கலையும், மின் சிக்கலையும் சீர் செய்து மக்களை கஷ்டத்திற்கு உட்படுத்தாமல் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவித்தும் மீண்டும் மீண்டும் இரண்டு சிக்கல்களும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.