அடிக்கடி உளுந்து சாப்பிடுவீங்களா! உணவில் அடிக்கடி உளுந்து சேர்ப்பதால் இதெல்லாம் உங்களுக்கு நிச்சயம் நிகழும் தெரிந்து கொள்ள தவறவிடாதீர்கள்?

அடிக்கடி உளுந்து சாப்பிடுவீங்களா! உணவில் அடிக்கடி உளுந்து சேர்ப்பதால் இதெல்லாம் உங்களுக்கு நிச்சயம் நிகழும் தெரிந்து கொள்ள தவறவிடாதீர்கள்?பருப்பு வகைகளில் உளுந்து தனித்துவமான குணாதிசயங்களைக் கொண்டிருக்கும். உளுந்தில் இருக்கும் அதிகப்படியான இரும்புச்சத்து உடலுக்கு வலு சேர்க்க கூடியது. உடல் பலவீனமாக இருப்பவர்கள் உளுந்து சாப்பிட்டால் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். எவ்வளவு கடுமையான நோயிலிருந்து மீண்டு வந்தவர்களும் உளுந்தை எடுத்துக் கொண்டால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவார்கள். அத்தகைய உளுந்து சமைக்கும் உணவில் அதிகம் சேர்ப்பதால் நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவுக்கு போகலாம்.

அடிக்கடி உளுந்து சாப்பிடுவீங்களா! உணவில் அடிக்கடி உளுந்து சேர்ப்பதால் இதெல்லாம் உங்களுக்கு நிச்சயம் நிகழும் தெரிந்து கொள்ள தவறவிடாதீர்கள்?

இன்றைக்கு உணவு முறை மாற்றத்தால் பெரும்பாலானோருக்கு இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை செரிமானம் என்பது தான். செரிமான பிரச்சனை இருப்பவர்கள் உளுந்து வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் செரிமான பாதையில் உள்ள செரிக்காத நச்சுக்களை கழிவாக மாற்றி எளிதாக வெளியேற்றி தள்ளும். இதனால் செரிமான பிரச்சனை தீர்வுக்கு வரும் எனவே அடிக்கடி உணவில் இதனை சேர்த்துக் கொள்ளுங்கள், நல்ல செரிமானத்தை பெற்றுக் கொள்ளலாம்.

மெலிந்த உடல் உடையவர்கள் நன்கு வலுப்பெற, உடம்பில் இருக்கும் எலும்புகள், தசைகள், நரம்புகள் அத்தனையும் ஊட்டச்சத்து பெற்று நன்கு வளர அடிக்கடி உங்களுடைய உணவு பட்டியலில் உளுந்து கஞ்சி அல்லது களியாக செய்து உட்கொண்டு வரலாம். தினமும் இதனை நாள்தோறும் தவறாமல் செய்பவர்களுடைய மெலிந்த தேகம் சீக்கிரமே நன்கு புஷ்டி பெறும். உடலில் இருக்கும் சூட்டினை தகர்த்து எறிய உடல் குளிர்ச்சி பெற உளுந்துடன் சேர்த்து தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு மற்றும் வெந்தயத்தை பனை வெல்லத்துடன் சேர்த்து களியாக செய்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். உடல் சூட்டினால் வரக் கூடிய பாதிப்புகள் நீங்க இது போல் அடிக்கடி களி செய்து சாப்பிடலாம். தாது விருத்தியாக பச்சை உளுந்தை அப்படியே காய வைத்து அரைத்து மாவாக்கி அதனுடன் சுத்தமான தேன் கலந்து தினமும் ஒரு உருண்டை என்று சாப்பிட்டு வந்தால் நல்ல பலன்களை பெறலாம்.

பொதுவாக ஆண்களை விடப் பெண்களுக்கு ஊட்டச்சத்து அதிகம் தேவை. அதிலும் குறிப்பாக பூப்பெய்திய பெண்களுக்கும், நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும் அதிகப்படியான ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. இதற்கு உளுந்து நல்ல ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். எனவே இத்தகைய பெண்கள் கட்டாயம் அடிக்கடி உணவில் உளுந்தங்களி, உளுந்தங்கஞ்சி போன்றவற்றை சேர்த்துக் கொள்வது நலம் தரும். இடுப்பு வலியால் அவதிப்படும் பெண்களுக்கு இடுப்பு எலும்புகள் வலுபெற அடிக்கடி உளுந்தை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் முக்கியம்.

எலும்புகளுக்கு பலமும் எலும்பு மற்றும் தசை முறிவு போன்ற பிரச்சனைகளுக்கும் சிறந்த ஒரு தீர்வை கொடுக்கும். ரத்தக் கட்டிகள் கரைய உளுந்து நல்ல ஒரு அருமருந்தாக செயல்படும்.

உளுந்தை நன்கு காய வைத்து பொடி செய்து அதனை சலித்து வைத்துக் கொள்ளவும். அதனுடன் கொஞ்சம் முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து கலக்கி ரத்த கட்டிகள் மீது தடவினால் கட்டிகள் விரைவாக கரையக் கூடிய வாய்ப்புகள் அதிகம். உளுந்து சேர்த்து கொள்ளலாம் என்பதற்காக அடிக்கடி உளுந்த வடை செய்து சாப்பிடுவது கூடாது. எண்ணெய் சேர்க்காமல் செய்யப்படும் உளுந்து பதார்த்தங்களை அடிக்கடி அதிகமாக உணவில் எடுத்துக் கொள்ளுங்கள், நிச்சயம் உடல் நல்ல வலுவுடன் மாறும்.

Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version