ரிஷாட்டின் மறியல் தொடர்கிறது. மனைவி, மாமனார் பிணையில் விடுதலை

16 வயது சிறுமியின் வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதீனின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. ஒக்டொபர் 01 ஆம் திகதி வரை அவரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு நீதவான் நீதீமன்றம் இன்று கட்டளை பிறப்பித்துள்ளளது. ரிஷாட்டின் மனைவி மற்றும் மாமனார் ஆகியோருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த நீதிமன்ற அமர்வின் போது ரிஷாட்டின் மைத்தனர் மற்றும் வேலைக்கு அமர்த்திய முகவர் ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்த காலத்திலேயே கொலையென சந்தேகிக்கப்படும் சிறுமியின் இறப்பு சம்பவம் நிகழந்தது. அந்த சம்பவம் தொடர்பான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில்,பின்னர் ரிஷாட் பதியுதீனுக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக தெரிவித்து சந்தேக நபர் பட்டியிலில் அவரும் சேர்க்கப்பட்டார்.
தொடர்ந்தும் வழக்கு திகதிகள் பிற்போடப்பட்டு வருகின்ற நிலையில் நடைபெற்ற சம்பவம் தொடரில் விபரங்கள் வெளியாகவில்லை.

ரிஷாட்டின் மறியல் தொடர்கிறது. மனைவி, மாமனார் பிணையில் விடுதலை

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version