இலங்கையில் 15 வயதுக்கும், 19 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசிகளை ஏற்ற அரசாங்கத்தினால் முடிவு செய்யப்பட்டுளளது. அத்துடன் 12 வயதுக்கு மேற்பட்ட விசேட தேவைக்குரிய பிள்ளைகளுக்கும் இந்த தடுப்பூசி வழங்கபபடவுள்ளன. ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமான இதனை தெரிவித்துளளார்.
பைசர் தடுப்பூசிகள் 95% கொரனோ வைரசுக்கு எதிராக செயற்படும் ஆற்றல் கொண்டவை என தெரிவிக்கபப்டுகிறது. பிரித்தானியா பைசர் தடுப்பூசிகளை 12-15 வயது பிரிவினருக்கு சிபாரிசு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.