நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மின் தடைக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்று இரவு போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுளள்து. இந்த போராட்டத்தில் பங்குபற்றுமாறு பாராளுமன்ற உறுப்பினர் M. A. சுமந்திரன் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
“தற்பொழுது நாட்டில் பரவலாக பல மணிநேர மின்சாரத்தடை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது. இதனால் மக்கள் அன்றாடம் பல பாதிப்புக்களுக்கு உள்ளாகின்றார்கள். இதனை எதிர்க்கும் முகமாக இன்று செம்மணி A9 வீதி சந்தியில் அனைத்து மக்களும் தங்களது எதிர்ப்பினை வெளிக்காட்டும் முகமாக மெழுகுவர்த்தி மற்றும் டோர்ச் லைட் சகிதமாக வருகை தந்து தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.” என சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
