பாராளுமன்றத்தை பிரிதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களது கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹரின் பெர்னான்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோர் பாராளுமன்றத்துக்குள் அத்துமீறி பொதிகளை கொண்டுவந்தமை தொடர்பில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பேசப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்ச்சைக்குரிய வரி சட்டமூலம் தொடர்பிலும் இந்த கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட உள்ள அதேவேளை அடுத்த பாரளுமன்ற கூட்ட தொடரை நடாத்துவது தொடர்பிலும் முடிவெடுக்கப்படவுள்ளது.
பாராளுன்றம் வரும் 8 ஆம் திகதி கூட்டப்படும் வாய்ப்புகள் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
