இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கு புதிதாக வருகை தந்துள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் ஆகியோருக்கிடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் இந்த சந்திப்பு தொடர்பில் அறிவித்துள்ளது. நாட்டில் தற்போது காணப்படும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும், தாம் அவற்றை தீர்ப்பதற்கு கைகொடுப்பதாகவும் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.
“எம் அனைவருக்கும் இலங்கையின் வளமான, புதுமையான, உள்ளிணைக்கப்பட்ட பொருளாதரமே தேவைபப்டுகிறது. அதனாலேயே கொரோனா பாதிப்பிலிருந்து மீள்வதற்காக 17.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியதாகவும் அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.