ரிஷாப் பாண்ட் அதிரடி, மீண்டது இந்தியா
இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது. தேநீர்பான இடைவேளை வரை ஆதிக்கம் செலுத்திய இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களது பந்துகளுக்கு இந்தியா துடுப்பாட்ட வீரர் ரிஷாப் பாண்ட் அதிரடியாக துடுப்பாடி இந்தியா அணியினை பலமான நிலைக்கு எடுத்து சென்றார். இருப்பினும் ஐந்தாவது சதத்தினை அவர் பூர்த்தி செய்யும் வாய்ப்பை இழந்து 96 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
அவரோடு ரவீந்தர் ஜடேஜாவும் நல்ல இணைப்பாட்டத்தை வழங்கியிருந்தார். இருவரும் சத இணைப்பாட்டத்தை பூர்த்தி செய்திருந்தனர்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவின் ஸ்கோர் விபரம்
| துடுப்பாட்டம் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓட்டம் | பந்து |
| மயங்க் அகர்வால் | L.B.W | லசித் எம்புல்தெனிய | 33 | 49 |
| ரோஹித் ஷர்மா | பிடி-சுரங்க லக்மால் | லஹிரு குமார | 29 | 28 |
| ஹனுமன் விஹாரி | Bowled | விஷ்வ பெர்னாண்டோ | 57 | 128 |
| விராத் கோலி | Bowled | லசித் எம்புல்தெனிய | 45 | 76 |
| ரிஷாப் பான்ட் | Bowled | சுரங்க லக்மால் | 96 | 97 |
| ஷ்ரேயாஸ் ஐயர் | L.B.W | தனஞ்செய டி சில்வா | 27 | 48 |
| ரவீந்தர் ஜடேஜா | 45 | 82 | ||
| ரவிச்சந்திரன் அஷ்வின் | 10 | 11 | ||
| உதிரிகள் | 10 | |||
| மொத்தம் | ஓவர்கள் – 85 | விக்கெட்கள் – 06 | 357 |
| பந்துவீச்சு | ஓவர்கள் | ஓட்டமற்ற ஓவர்கள் | ஓட்டங்கள் | விக்கெட்கள் |
| சுரங்க லக்மால் | 16 | 01 | 63 | 01 |
| விஷ்வ பெர்னாண்டோ | 16 | 01 | 69 | 01 |
| லஹிரு குமார | 10.5 | 01 | 52 | 01 |
| லசித் எம்புல்தெனிய | 27 | 02 | 103 | 02 |
| தனஞ்செய டி சில்வா | 11 | 01 | 47 | 01 |
| சரித் அசலங்க | 3.1 | 00 | 14 | 00 |
—————————
இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையில் இன்று காலை ஆரம்பித்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி சிறப்பாக பந்துவீசி வருகிறது. இந்தியா அணி நல்ல ஆரம்பத்தை ஏற்படுத்திய போதும் மத்திய போசன இடைவேளைக்கு முன்னதாகவும், பின்னதாகவும் இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
இன்று தனது நூறாவது போட்டியில் விளையாடும் விராத் கோலி 45 ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார். 04 விக்கெட்கள் வீழத்தப்பட்டுள்ள போதும் இந்தியா அணியின் துடுப்பாட்ட வரிசை நீண்டது. சுழற்பந்து வீச்சாளர்கள் மூவருமே சகலதுறை வீரர்கள் என்பதனால் இலங்கை அணி சகல விக்கெட்களையும் கைப்பற்ற போராடினாலே இந்தியா அணியினை கட்டுப்படுத்த முடியும்.
————————————
இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று இந்தியா மொஹாலியில் ஆரம்பித்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிவரும் இந்தியா அணி 2 விக்கெட்களை இழந்து 109 ஓட்டங்களை பெற்றுள்ளது.
ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டம் 50 ஓட்டங்களை வழங்கிய போதும் இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் லஹிரு குமார, லசித் எம்புல்தெனிய ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றி இந்தியா அணியின் சிறந்த ஆரம்பத்தை தடுமாற வைத்துள்ளனர்.
ரோஹித் ஷர்மா 33 ஓட்டங்களையும், மயங்க் அகர்வால் 29 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். ஹனுமன் விஹாரி ஆட்டமிழக்காமல் 30 ஒட்டங்களையும், விராத் கோலி ஆட்டமிழக்காமல் 15 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.
———————-
இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இந்தியா, மொஹாலி கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பித்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள இந்தியா அணி மிதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.
அணி விபரம்
இந்தியா – ரோஹித் ஷர்மா, விராட் கோலி, மயங்க் அகர்வால்,ஹனுமான் விஹாரி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பாண்ட், ரவீந்தர் ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஜயந்த் யாதவ், மொஹமட் ஷமி, ஜஸ்பிரிட் பும்ரா
இந்தியா அணி சார்பாக விராத் கோலி நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார். முழுநேர தலைவராக ரோஹித் ஷர்மா பொறுப்பேற்றுள்ள முதலாவது டெஸ்ட் போட்டி இதுவாகும்.
இந்தியா தனது அணியின் அனுபவம் வாய்ந்த முக்கிய வீரர்களான அஜிங்கையா ரெஹானே, செட்டெஸ்வர் புஜாரா ஆகியோரினை அணியினால் நீக்கி விளையாடுகிறார்.
இலங்கை – திமுத் கருணாரட்ன, லஹிரு திரிமான்னே, பதும் நிசங்க, அஞ்சலோ மத்தியூஸ், தனஞ்செய டி சில்வா, சரித் அசலங்க, நிரோஷான் டிக்வெல்ல, சுரங்க லக்மால், லசித் எம்புல்தெனிய, விஸ்வ பெர்னாண்டோ, லஹிரு குமார.
டுஸ்மாந்த சமீர இலங்கை அணி சார்பாக இன்றைய போட்டியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. குஷல் மென்டிஸ் தடையிலிருந்து மீண்டும் டெஸ்ட் போட்டி அணியில் சேர்த்துக்கொல்லப்பட்டுள்ள போதும் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.
