எரிபொருள் மற்றும் மின் கட்டண அதிகரிப்புக்கு வாய்ப்பு ஏற்பட்டு வருகிறது. இலங்கை மத்திய வங்கி எரிபொருள் மற்றும் மின் கட்டணத்தை உடனடியாக அதிகரிக்குமாறு அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஒயில் விலையும் அதிகரித்துள்ளது. ஆனால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையினை அதிகரிக்கவில்லை. லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் இரண்டு தடவைகள் விலையினை அதிகரித்துள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக மின்கட்டணமும் அதிகரிக்க வேண்டும் என்ற நிலையிலேயே இந்த பருந்துறையினை இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்துக்கு வழங்கியுள்ளது.
ஏற்கனவே எரிபொருள் விலையினை அதிகரிக்குமாறு பெற்றோலிய கூட்டுத்தாபனம் கோரிய போதும் அரசாங்கம் விலை அதிகரிப்பினை செய்யவில்லை.
விலையேற்றங்களை செய்தால் மட்டுமே இனிவரும் காலங்களில் பொருளாதர சுமையை அரசாங்கம் சமாளிக்க முடியுமென்ற நிலையில் இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.