வார இறுதி நாட்களான நாளை மற்றும் நாளை மறுதினங்களில் மின் தடைக்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கு பொது சேவைகள் ஆணைக்குழு அனுமதியினை வழங்கியுள்ளது.
05 ஆம் திகதியுடன் மின்தடை நிறைவுக்கு வருமென மிசாரசபை உயர் அதிகாரிகள் ஜனாதிபதிக்கு தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு அண்மையில் தெரிவித்திருந்தது. ஆனாலும் மின்தடை அதன் பின்னரும் தொடரவுள்ளது.
நாளை(05.03) சனிக்கிழமை P, Q, R, S, T, U, V, மற்றும் W பகுதிகளில்காலை 8.30 மணி முதல் மாலை 5.30 வரையான நேரப்பகுதியில் மூன்று மணி நேரமும், மாலை 6.00 மணி முதல் மாலை 10.00 மணி வரையான நேரப்பகுதியில் 01 மணி நேரமும் மின் தடை அமுல் செய்யப்படவுள்ளது.
E மற்றும் F பகுதிகளில் நான்கு மணித்தியாலங்கள் மற்றும் மூன்று மணித்தியாலங்களாக இரண்டு தடவைகள் 7 மணித்தியாலங்களுக்கு மின் தடை செய்யப்படவுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை A, B , C ஆகிய பகுதிகளில் 2மணி நேரமும் பின்னர் அரை மணி நேரமும் மின்தடை அமுல் செய்யப்படவுள்ளது.