இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் இன்று நிறைவடைந்துள்ளது. இந்தியா அணி இன்று முழுமையாக இலங்கை அணி மீது ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
ரவீந்தர் ஜடேஜா அஷ்வின் ஜோடி இன்று இலங்கை அணி மீது முழுமையாக ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். துடுப்பாட்டத்தில் இருவரும் மிக சிறந்த இணைப்பாட்டத்தை பூர்த்தி செய்தனர். ரவீந்தர் ஜடேஜா 36 வருடங்களின் பின்னர் கபில் தேவின் சாதனையை முறியடித்தார்.
ஏழாம் இலக்கத்தில் கூடுதலான ஓட்டங்களை பெற்ற இந்திய வீரராக சாதனையை முறியடித்துள்ளார். பந்துவீச்சில் இருவரும் மூன்று விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
நேற்றைய செய்தியில்,இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் இந்தியா அணியின் சுழற் பந்துவீச்சாளர்களின் துடுப்பாட்டத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டிருந்தோம்.
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் சிரேஷ்ட வீரர்கள் பிரகாசிக்க தவறியுள்ளனர்.
நாளையத்தினம் 374 ஓட்டங்களை தொட்டால் மட்டுமே இலங்கை அணி பொலோ ஒன் முறையில் துடுப்பாடுவதனை தவிர்க்க முடியும். இலங்கை அணியின் இளைய நம்பிக்கை நட்சத்திரங்களான சரித் அசலங்க, பத்தும் நிசங்க ஆகியோர் ஆடுகளத்தில் தொடர்ந்தும் காணப்படுவது நம்பிக்கையே.
இரண்டாம் நாலா நேர முடிவின் போது ஸ்கோர்
துடுப்பாட்டம் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓட்டம் | பந்து |
மயங்க் அகர்வால் | L.B.W | லசித் எம்புல்தெனிய | 33 | 49 |
ரோஹித் ஷர்மா | பிடி-சுரங்க லக்மால் | லஹிரு குமார | 29 | 28 |
ஹனுமன் விஹாரி | Bowled | விஷ்வ பெர்னாண்டோ | 57 | 128 |
விராத் கோலி | Bowled | லசித் எம்புல்தெனிய | 45 | 76 |
ரிஷாப் பான்ட் | Bowled | சுரங்க லக்மால் | 96 | 97 |
ஷ்ரேயாஸ் ஐயர் | L.B.W | தனஞ்செய டி சில்வா | 27 | 48 |
ரவீந்தர் ஜடேஜா | 175 | 228 | ||
ரவிச்சந்திரன் அஷ்வின் | பிடி-நிரோஷன் டிக்வெல்ல | சுரங்க லக்மால் | 61 | 79 |
ஜயந்த் ஜாதவ் | பிடி- லஹிரு திரிமானே | விஷ்வ பெர்னாண்டோ | 02 | 18 |
மொஹமட் ஷமி | 20 | 34 | ||
உதிரிகள் | 24 | |||
மொத்தம் | ஓவர்கள் – 129.2 | விக்கெட்கள் – 08 | 574 |
பந்துவீச்சு | ஓவர்கள் | ஓட்டமற்ற ஓவர்கள் | ஓட்டங்கள் | விக்கெட்கள் |
சுரங்க லக்மால் | 25 | 01 | 90 | 02 |
விஷ்வ பெர்னாண்டோ | 20 | 01 | 135 | 02 |
லஹிரு குமார | 10. 5 | 01 | 52 | 01 |
லசித் எம்புல்தெனிய | 46 | 03 | 188 | 02 |
தனஞ்செய டி சில்வா | 18.2 | 01 | 79 | 01 |
சரித் அசலங்க | 3.1 | 00 | 14 | 00 |
துடுப்பாட்டம் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓட்டம் | பந்து |
டிமுத் கருணாரட்ண | L.B.W | ரவீந்திர ஜடேஜா | 28 | 71 |
லஹிரு திரிமானே | L.B.W | ரவிச்சந்திரன் அஷ்வின் | 17 | 60 |
பத்தும் நிசங்க | 26 | 75 | ||
அஞ்செலோ மத்யூஸ் | L.B.W | ஜஸ்பிரிட் பும்ரா | 22 | 39 |
தனஞ்சய டி சில்வா | L.B.W | ரவிச்சந்திரன் அஷ்வின் | 01 | 08 |
சரித் அசலங்க | 01 | 12 | ||
உதிரிகள் | 13 | |||
மொத்தம் | ஓவர்கள் – 43 | விக்கெட்கள் – 04 | 108 |
பந்துவீச்சு | ஓவர்கள் | ஓட்டமற்ற ஓவர்கள் | ஓட்டங்கள் | விக்கெட்கள் |
மொஹமட் ஷமி | 07 | 03 | 17 | 00 |
ஜஸ்பிரிட் பும்ரா | 09 | 02 | 20 | 01 |
ரவிச்சந்திரன் அஷ்வின் | 13 | 06 | 21 | 02 |
ஜயந்த் ஜாதவ் | 05 | 02 | 14 | 00 |
ரவீந்திர ஜடேஜா | 09 | 03 | 30 | 01 |
———————–
இந்தியா , இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பாடி வரும் இந்தியா அணி ரவீந்தர் ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோரது இணைப்பாட்டம் மூலமாக பலமாகியுள்ளது.
மதியபோசன இடைவேளைக்கு சற்று முன்னர் அஷ்வின் ஆட்டமிழந்தார். ரவீந்தர் ஜடேஜா தனது இரண்டாவது சதத்தை பெற்றுக்கொண்டார்.
மதிய போசன இடைவேளை வரையான ஸ்கோர்