எரிபொருள் வரிசை தொடர்கிறது – சில நாட்களில் தீர்வென அமைச்சர் கூறுகிறார்

நாடளாவியரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக் குடீசல் மற்றும் பெற்றோல் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஆகவேஎரிபொருள் நெருக்கடி இன்னும் சிலநாட்களில் முடிவுக்குவரும் என வலுசக்தி அமைச்சர் காமினி லொகுகே உறுதியளித்துள்ளார்.

எரிபொருள் மற்றும் மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பாக இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்த அமைச்சர், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள்,மீனவர்கள் மற்றும் சுற்றுலாத்துறை தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

அத்தோடு பொதுமக்கள் நேற்றும்(06.03) எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்டவரிசையில் காத்திருப்பதைக் காணமுடிந்ததாகவும் அமைச்சர் காமினிலொக்குகே மேலும் தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டத்துக்குள் எரிபொருள் விநியோகிக்கப்பட்ட காரணத்தினால் மக்கள் வரிசையில் நிற்பது குறைந்துள்ளது. ஆனால் வெளிமாவட்டங்களுக்கு எரிபொருள் முழுமையாக சீராக விநியோகிக்கப்படாத காரணத்தால் மக்கள் நீண்டவரிசையில் எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக காத்திருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.

பல எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் இன்னமும் கிடைக்காத நிலையும் காணப்படுகிறது. எரிபொருள் தட்டுப்பாடு கடந்த 03 ஆம் திகதியோடு முடிவுக்கு வரும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் இன்றோடு முழுமையா எரிபொருள் சிக்கல் நிறைவுக்கு வருமென தெரிவித்திருந்தார்.

ஆனால் எதுவும் நிறைவுக்கு வருவதாக தெரியவில்லை. மக்கள் வரிசையில் நிற்பதையே காண முடிகிறது.

எரிபொருள் வரிசை தொடர்கிறது - சில நாட்களில் தீர்வென அமைச்சர் கூறுகிறார்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version