நாளை முதல் சமையல் எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்படுமென ஜனாதிபதி செயலாளர் அறிவித்துள்ளார். கடலில் தரித்து நின்ற கப்பலில் உள்ள எரிவாயுவுக்கான பணம் கட்டப்பட்டுள்ளதாகவும், நாளை முதல் கொள்கலன்கள் இறக்கப்படும் பணிகள் ஆரம்பிக்கவுள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயு தட்டுப்பாடு மீண்டும் ஆரம்பித்த நிலையில் மீண்டும் சமையல் எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கும் பட்சத்தில் தட்டுப்பாடு நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. LP நிறுவனத்துக்கான டொலர் வழங்கப்பட்டதனை தொடர்ந்தே இவ்வாறு எரிவாயு கொள்கலன்களுக்கு பணம் கட்டப்பட்டுள்ளது.
