இன்று மேல் மாகாணத்தின் பல பகுதிகளிலும், தென் மாகாணத்தின் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அதிக மழை வீழ்ச்சிக்கான சாதக நிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துளளது.
கிழக்கு, சப்ரகமுவ, ஊவா, மத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புகளும் காணப்படுகின்றன. மதியம் 2 மணிக்கு பின்னர் அதிக மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா மற்றும் மத்திய மாகாணத்தில் 50 mm இற்கும் அதிகமான மழை பெய்யும் வாய்ப்புகள் காணப்படுவதாகவும், மாத்தறை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 50 mm மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
எதிர்வரும் 21 ஆம் திகதி தென்மேல் மாகாணத்தில் புயல் ஏற்படும் வாய்ப்பு காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. வங்காள விரிகுடாவில் ஏற்பட்டு வரும் குறைந்த தாழ் அமுக்கம் வலுவடைந்து வருவதாகவும், கிழக்கு மற்றும் வட கிழக்கு பகுதிகளினூடாக புயல் நாட்டை கடந்து அந்தமான் தீவுகளை நோக்கி நகருமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
