IMF, பேச்சுவார்த்தைக்கு பச்சை கொடி

சர்வதேச நாணய நிதியம், இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்தைகளை நடாத்த தயார் என அறிவித்துள்ளது. சர்வதேச நாணயத்தின் உயர் அதிகாரிகள் இலங்கை வந்து ஜனாதிபதி, நிதியமைச்சர், உட்படட முக்கியஸ்தர்களை சந்தித்து சென்றிருந்தார்கள்.

இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை தயாராக இருப்பதாக தெரிவித்த அதேவேளை, கடந்த புதன்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சர்வதேச நாணய நிதியத்துடன் சேர்ந்து பயணிக்க தயாராக இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசுடன் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடாத்த தாம் தயார் என அறிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு, இலங்கை அரசு உதவிகளை கோரும் பட்சத்தில் அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டு உதவிகளை செய்தால் அல்லது வழங்க வேண்டிய கடன் கொடுப்பனவுகளுக்கு அவகாசம் வழங்கினால் இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைகளுக்கு ஓரளவு தீர்வு கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

IMF, பேச்சுவார்த்தைக்கு பச்சை கொடி

Social Share

Leave a Reply