ஜனாபதி நாளைய தினமே பதவி விலகினாலும் தேர்தலுக்கு செல்ல முடியாதென சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர கருத்து தெரிவித்துள்ளார். பாராளுமன்றமே அடுத்த ஜனாதிபதி யார் என்பதனை தெரிவு செய்ய முடியுமென மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு கீழ் அரசாங்கத்தை அவரால் கலைக்க முடியாது. இவ்வாறான நிலையில் அதிகாரத்தை மாற்றுமாறு கூச்சலிடுவதன் மூலம் அது சாத்தியமாகாது என்று அவர் தன்னுடைய கருத்தை வெளியிட்டுள்ளார்.
முன்நாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச இறந்த போது பாராளுமன்றத்தில் D.B விஜயதுங்க பெருமான்மையே பெற்றதனாலேயே ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். சட்ட வரைபுக்கு அமைவாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற ஒரு காலமுண்டு.
அரசாங்கம் ஒன்றில்லாத காலத்தில் ஆட்சியினை கைப்பற்றுவது நடைமுறையிலில்லை. ஆட்சி மாற்றப்பட்டு புதியவர்களினால் ஆட்சி தொடரலாமென அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் கூறியுள்ளார்.