இலங்கையில் காகிதம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமையினால் வினாத்தாள்களை அச்சிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 2021 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை பரீட்சசைகளை திட்டமிட்டது போல நடாத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வலைய கல்வி பணிமனைகளுக்கான பணிப்பாளர் ஸ்ரீலால் நோனிஸ் எழுத்து மூலமாக அனைத்து வலயங்களுக்கும் அறிவித்துள்ளார்.
ஏப்ரல் விடுமுறைகளுக்கு பின்னர் தரம் 09,10,11 ஆகியவற்றுக்கான பரீட்சைகளை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. தரம் 06, 07,08 பரீட்சசைகளை மீள் ஏற்பாடுகள் செய்யுமாறும் பாடசாலை மட்டங்களில் நடாத்தப்படும் பரீட்சசைகளை பாடசாலைகளின் வசதிகளுக்கு ஏற்றால் போல நடாத்துமாறும் மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாடசாலைகள் வினா தாள்களை தயார் செய்திருந்தால் பாடசாலை மட்ட பரீட்சசைகளை நடாத்த முடியுமெனவும் கூறப்பட்டுள்ளது.
மீள் ஒழுங்கு செய்யப்படும் திகதிகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படுமென ஸ்ரீலால் நோனிஸ் தெரிவித்துள்ளார்.