எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் மரணமடைந்துள்ளார். கண்டி, கட்டுகஸ்தோட்டையை சேர்ந்த 71 வயதான முதியவர் கண்டி நகரத்தில் எரிபொருள் நிலையத்தில் வரிசையில் காத்திருந்த நிலையில் மயக்கமடைந்து வீழ்ந்துள்ளார்.
அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். மரணத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
கொரோனா காலங்களில் இவ்வாறு மயக்கமடைந்து வீழ்ந்தவர்களது மரணங்கள் கொரோனாவினால் நிகழ்ந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. வைத்தியசாலை தகவல்கள் வெளியாகிய பின்னரே உறுதியான காரணம் தெரிய வரும்.
