ஜனாதிபதியினால் ஏற்பாடு செய்யப்படும் அனைத்து கட்சி மாநாட்டை மக்கள் விடுதலை முன்னணி புறக்கணிப்பதாக அதன் தலைவர் அனுர குமார திஸ்ஸநாயகே தெரிவித்துள்ளார்.
நாட்டு நிலைமைக்காக கூட்டப்படும் கூட்டமல்ல என தெரிவித்துள்ள அவர், அரசாங்க கட்சிக்குள் உருவாகியிருக்கும் சிக்கல்களை தீர்ப்பதற்கான மாநாடு என அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினை ஜனாதிபதி சந்தித்த பின்னரே இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சர்வ கட்சி மாநாட்டை கூட்டுவதாக இருந்திருந்தால் கொரோனா காலத்தில் கூட்டியிருக்க வேண்டுமென கருத்து வெளியிட்ட அனுர குமார, இந்த மாநாட்டை கூட்டுவது தவறெனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
மற்றைய கட்சிகளது தலைவர்களால் வழங்கப்பட்ட திட்ட வரைபுகளை கருத்தில் எடுக்காமல் தன்னிச்சையாக ஜனாதிபதி செயற்படுகிறார் என்ற கருத்தையும் முன் வைத்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் மோசமடைந்த பின்னர் சர்வ கட்சி மாநாடு கூட்டப்பட்டுள்ளதாகவும், இது 1 1/2 வருடங்களுக்கு முன்னர் செய்திருக்க வேண்டியது எனவும், சர்வதேச நாணய நிதியம் வழங்கிய அறிக்கை இன்னமும் பாராளுமன்றத்துக்கு வழங்கப்படவில்லை என்பதனையும் சுட்டிக்காட்டினார் அனுர குமார திஸ்ஸநாயகே.