சிங்கப்பெண்ணே – போரினால் தாய், தந்தையரை இழந்து முன்னேறிய பெண்

பெண் பிள்ளைகளின் வாழ்க்கை முன்னேற்றம் என்பது சமூகத்தில் மிக முக்கியமானது. அவ்வாறான முன்னேற்றத்துக்கு அவர்களுடைய தொழில் முக்கியமானது. அவ்வாறான தொழில் வாய்ப்பு கிடைத்துவிட்டால் பெண்கள் இந்த வானத்தில் சிறக்கடித்து பறப்பார்கள்.

போரில் தனது பெற்றோரை இழந்த பெண் ஒருவர், இல்லத்தில் வளர்ந்து தனக்கான ஒரு வேலையை செய்து, தனக்கான வாழ்க்கையை அமைத்து, குடும்பத்தோடு சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்.

வேலை செய்யுமிடமே அதற்கான காரணம். கண்ணீர் மல்க கோடீஸ்வரி தனக்கு வாழ்க்கை கொடுத்த ஒமேகா லைன் – வவுனியா பற்றி கூறியுள்ளார். அவருடைய பொருளாதாரம் முன்னோக்கி சென்றுள்ளது. வட்டியில்லாத கடன் மூலமாக வீடு கட்ட முடிந்துள்ளது. இவற்றை விட தனக்கு எதுவுமே தெரியாம இருந்த நிலையில், அனைத்துக்கும் பயந்த ஒருவராக இருந்த நிலையில் அவை எல்லாவற்றையும் பயிற்சி மூலமாக இல்லாமல் செய்து தனக்கு பல விடயங்களை சொல்லி தந்துள்ளதாக பெருமிதம் கொள்கிறார் கோடீஸ்வரி.

ஒரு நிறுவனம் தன்னுடைய தொழிலார்களுக்கு சம்பளம் மட்டுமே வழங்குவது முக்கியமல்ல. அவர்களது தனிப்பட்ட திறமைகளை வளர்த்துவிட வேண்டும். இவ்வாறான பெண்களின் சிக்கல்களை, பிரச்சினைகளை களைய வேண்டும். அவ்வாறு செய்து அவர்களது வாழ்வில் ஒரு பங்காளராக இருப்பது பெரிய விடயமே.

ஒமேகா லைன் – வவுனியா, தொழிலார்களுக்கு தேவையான வசதிகளை வழங்கி வருகிறது. உரிய பயிற்சிகளை வழங்குகிறது. அனுபவமானவர்கள், அனுபவமற்றவர்கள் என யாருமே இங்கு இணைந்து கொள்ளாலாம். இங்கு இணைவதன் மூலம் உங்கள் வாழ்க்கையையும் அடுத்த கட்டத்துக்கு முன்னேற்றி செல்லுங்கள்.

பல வேலைகளுக்கு பெண்கள், ஆண்களென வெற்றிடங்கள் காணப்படுகின்றன. கல்வி அறிவு குறைந்தவர்கள், பல்கலை பட்டம் பெற்றவர்கள் என பலவித வேலைவாய்புகள் காத்திருக்கின்றன. ஒமேகா லைனுக்கு தொடர்பு கொள்ளுங்கள். நீங்களும் உங்கள் வாழ்வில் முன்னேறுங்கள்.

வீடியோவினை முழுமையாக பாருங்கள்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version