நிட்டம்புவ பகுதியில் எரிபொருள் நிரப்புவதற்காக வருகை தந்த இருவருக்கிடையில் நடைபெற்ற மோதலில் 29 வயதான கொழும்பு 14 ஐ சேர்ந்த இளைஞர் ஒருவர்உயிரிழந்துள்ளார் .
முச்சக்கர வண்டியில் சென்று பெற்றோல் நிரப்பி விட்டு எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு வெளியே நின்று, மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை தாக்கி கூரிய ஆயுதத்தினால் குத்தியதனால் இறப்பு நடைபெற்றுளளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறந்த நபர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். நிட்டம்புவ, ஹொரகல பகுதியில் பெற்றோல் நிலையத்துக்கு சென்ற இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதனை தொடர்ந்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தப்பி சென்றுள்ள முச்சக்கர வண்டி ஓட்டுனரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
நேற்றைய தினம் கடவத்தை பகுதியில் எரிபொருளுக்கு வரிசையில் காத்திருந்த வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முன்னதாக கண்டியில் இவ்வாறு வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
