லிற்றோ எரிவாயு விலையை அதிகரிக்கும் தீர்மானம் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லையென அந்த நிறுவனத்தின் தலைவர் தெசார ஜெயசிங்க இன்று தெரிவித்துள்ளார். ஆனால் அதிகரிக்கவே மாட்டாது என அவர் கூறவில்லை.
லாப்ஸ் எரிவாயு விலையேற்றப்பட்ட நிலையில் லிற்றோ எரிவாயுவும் விலையேற்றப்படுமென்ற என்ற எதிர்பார்ப்பில் அவரிடம் இது தொடர்பாக வினவிய போதே தெசார ஜெயசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
லாப்ஸ் எரிவாயு 4200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் அதேவேளை,கடந்த வாரம் லிற்றோ எரிவாயுவின் விலையினை 4600 ரூபவாக அதிகரித்தாலே தமது நிறுவனம் நட்டமடைவதை தடுக்க முடியுமென லிற்றோ நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
லிற்றோ எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு முன்னாள் எரிவாயுவுக்காக ஆண்கள், பெண்கள் வரிசையில் நிற்பதனை தொடர்ந்தும் காண முடிகிறது.
