ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியினை இராஜினாமா செய்யவுள்ளதாக சமுக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லையென ஜனாதிபதி ஊடக பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்கவை மேற்கோள் காட்டி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி தனது பதவியினை இராஜினாமா செய்ய ஆலோசித்து வருவதாக தகவல்கள் பரப்பப்டுவது உண்மைக்கு புறம்பானது என தெரிவித்துள்ள கிங்ஸ்லி ரத்நாயக்க, இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலையில் தப்பி செல்லும் நபர் ஜனாதிபதியல்ல என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நெருக்கடியான சூழ்நிலைக்கு தீர்வினை காண சகல நடவடிக்கைகளையும் ஜனாதிபதி எடுத்து வருவதாகவும் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நாளையதினம் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
