இங்கிலாந்தில் இந்த வருடம் மே மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலான கவுன்சில் தேர்தலில் இலங்கை, வவுனியாவை சேர்ந்த சிவசிதம்பரம் ரஞ்சன் எனப்படும் தமிழர் போட்டியிடுகிறார்.
சிவா ரஞ்சன், சவுதம்ப்டன், மெட்டின் பகுதியில் தற்போதைய ஆளும் கென்சர்வேர்டிவ் கட்சி சார்பாக போட்டியிடுகிறார். இலங்கை தமிழர் ஒருவர் ஆளும் கட்சி சார்பாக போட்டியிடுவது முக்கியமானதாக அமைகிறது.
கடந்த தேர்தலில் 25 வாக்குகளினால் தோல்வியை சந்தித்தவர் இம்முறை வெற்றி பெறுவதற்கான அதிக வாய்ப்புகளுள்ளவராக கணிக்கப்ட்டுள்ளார். உலகளாவிய ரீதியில் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து சென்ற தமிழர்கள் பலரும் தேர்தல்களில் போட்டியிட்டு வருகின்றனர். சிலர் வெற்றி பெறுகிறார்கள். சிலர் தோல்வியடைகிறார்கள்.
ரஞ்சன் ஏற்கனவே மக்கள் நல திட்டங்களில் ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருகிறார். கட்சி உறுப்பினர்களோடு சேர்ந்து தன்னுடைய பகுதிகளில் இவர் பல வேலைத்திட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.
இலங்கையிலிருத்து புலம்பெயர்ந்து சென்று வாழ்க்கையில் முன்னேறுவது ஒரு பக்கம். அதையும் தாண்டி மக்கள் சேவையில், அரசியலில் களமிறங்கி மக்களுக்காக சேவை செய்வதென்பது மிகபெரிய விடயமே.
7000 வாக்களர்கள் வாழும் குறித்த பகுதியில் 5 சதவீதமானார்கள் மட்டுமே தமிழர்கள். ஆங்கிலேயர்கள் 95 சதவீதம் வாழும் பகுதியில் தமிழர் ஒருவர் களமிறங்கி தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது இலங்கை வாழ் தமிழர்களுக்கும், புலம்பெயர் இலங்கை வாழ் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் விடயமே.
இதுவரையில் வவுனியாவிலிருந்து சென்றவர்களில் யாரும் இங்கிலாந்து தேர்தல்களில் போட்டியிடவில்லையென்பது சுட்டிக்காட்டத்தக்கது.