சுற்று சூழலை அரசாங்கமே அழிக்கிறது – சாணக்கியன் MP

இந்தோனேஷியாவில் நடைபெற்றுவரும் 144 ஆவது சர்வதேச பாராளுமன்ற சங்கத்தின் கூட்ட தொடர் நடைபெற்று வருகிறது. இலங்கை சார்பாக தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தமிழ் பேசும் ஒருவராக கலந்து கொண்டுள்ளார்.

இன்று நடைபெற்ற அமர்வில் காலநிலை மாற்றம் மாநாடு நடைபெற்றுள்ளது. இதில் சாணக்கியன் பேச்சாளராக கலந்து கொண்டிருந்தார். “வரலாற்றில் முதல்முறையாக சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் பேச்சாளராக இலங்கை சார்பாக கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது” என அவர் தனது மகிழ்ச்சியினை வெளியிட்டுள்ளார்.

“சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தில் 178 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ள நிலையில், பிரித்தானியா, ஒஸ்ரியா, இந்தோனேசியா மற்றும் இலங்கையினை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக நானும் பேச்சாளராக கருத்துக்களை வெளியிட்டிருந்தேன்” என சாணக்கியம் MP மேலும் தெரிவித்திருந்தார்.

இலங்கையில் சுற்றுசூழலினை அரசாங்கமே அழிக்கின்றது. அப்படியான நேரத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கிளஸ்கோ மாநாட்டில் தெரிவித்த கருத்துக்கள் இலங்கையில் 100 சதவீதம் நடைமுறையில் இல்லை. அவை நடைமுறைப் படுத்தப்படுகின்றனவா என்பதனை சர்வதேச நாடுகள் கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்தாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

சுற்று சூழலை அரசாங்கமே அழிக்கிறது - சாணக்கியன் MP
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version