ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிறைவேற்று அதிகாரங்களை அமைச்சரவைக்கு மாற்றம் செய்து புதிய ஜனாதிபதியினை பாராளுமன்றம் தெரிவு செய்யும் அரசியலமைப்பின் 21 வது சட்ட திருத்தத்தை அமுல் செய்வதற்கான சட்ட மூலத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளார்.
புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேத்தல் தொடர்பிலும் விஜயதாச ராஜபக்ஷ முன்மொழிந்துள்ள அதேவேளை, அத்தகைய தேர்தலுடன் தற்போதைய ஜனாதிபதியின் அலுவலகம் நிறுத்தப்படும் என்பதனையும், பெரும்பான்மை பலமுள்ள பாராளுமன்ற உறுப்பினரை புதிய பிரதமராக, புதிய ஜனாதிபதி தெரிவு செய்வார் என்ற விடயங்களும் குறித்த சட்ட மூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
விஜயதாச ராஜபக்ஷ MP தனது தனிப்பட்ட உறுப்பினர்கள் சட்டமூலத்தில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளடக்கிய இடைக்கால அமைச்சரவையை நியமிக்க முன்மொழிந்துள்ளதோடு , இடைக்கால அரசாங்கம் சபையின் பதவிக்காலம் முடியும் வரை அல்லது அது கலைக்கப்படும் வரை தொடரும். பொருளாதாரத்தை மீட்டெடுக்க இடைக்கால அரசு நீண்ட கால மற்றும் குறுகிய கால கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்ற விடயங்களையும் கையளித்த 21 வது சட்ட திருத்தத்தில் உள்ளடக்கியுள்ளார்.