48 மணித்தியால எச்சரிக்கை விடுத்த நாமல்! பசிலை தவிர்த்த உறுப்பினர்கள்!

ஜனாதிபதியின் கூட்டத்தில் பங்கேற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நடத்திய கூட்டத்துக்கு செல்லவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று அரசாங்கக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது தமது தனிப்பட்ட வீட்டுக்கு செல்லும் வழியில் இடம்பெற்ற போராட்டம் மற்றும் அதன்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி விளக்கமளித்தார்.

இதன்போது எதிர்காலத்தில் எடுக்கப்படவேண்டிய செயற்பாடுகள் கலந்துரையாடப்;பட்டு அதன்படியே அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படடது. மூன்று மணி நேரம் இந்த கலந்துரையாடல் நடைபெற்றபோது, திஸ்ஸ குட்டியாராட்சி, தற்போது நடைபெற்று வரும் போராட்டங்கள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்தார்

நாடு தழுவிய போராட்டங்கள் நடத்தப்படும் சனி (நேற்று) மற்றும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களுக்கு ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

இதன்போது கருத்துரைத்த சரித ஹேரத், முன்னர் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச மற்றும் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியோர் எதிர்கொண்டது போன்ற நிலைமையே இப்போதும் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

இந்த கருத்தை சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே மற்றும் சிசிர ஜெயக்கொடி ஆகியோர் ஆமோதித்தனர் தமது கருத்தை வெளியிட்ட நாமல் ராஜபக்ச,அடுத்த 48 மணித்தியாலங்கள்; சோதனைக்குரிய காலம் என்று குறிப்பிட்டார்

கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, மொரட்டுவை நகர முதல்வர்; சமன்லால் பெர்னாண்டோவின் வீடு போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டதாக தொலைபேசியில் செய்தி வந்தது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version