இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தனது பதவி விலகளுக்கான கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துளார்.
நேற்று(03.04) அமைச்சரவை அமைச்சர்கள் தங்களது இராஜினாமா கடிதங்களை பிரதமரிடம் கையளித்துள்ளனர். குறித்த கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையிலேயே ஜனாதிபதி தேசிய அரசாங்கம் அமைக்க அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இராஜினாமா செய்து, மீண்டும் மத்திய வங்கி ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டார். நாட்டின் இக்கட்டான சூழ்நிலையினை கருத்திற் கொண்டு இவருக்கு இந்த பதவி வழங்கப்பட்ட அதேவேளை அமைச்சரவை அந்தஸ்தும், இலங்கையின் ஐந்தாவது உயரிய பதவி நிலையும் வழங்கப்பட்டது.
