இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும் அரசிற்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது.
இதன்போது ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதியானால் வழங்கப்பட்ட பதில்கள் சாதகமாக இருந்தபோதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதில் சந்தேகம் இருப்பதனால் தனது ராஜாங்க அமைச்சு பதவியை ராஜினாமா செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளதோடு இன்று முதல் தமது கட்சி சுயாதீனமாக இயங்கும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார் .
அத்தோடு நேற்றைய தினம் ஆளும் பொதுஜன பெரமுனாவின் பங்காளி கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசில் இருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது, இவ்வாறான நிலையில் இன்று இலங்கை தொழிலாளர் கட்சியும் அரசில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.