பெரும்பான்மையை இழந்தது ஆளும் கட்சி?

ஆளும் பொதுஜன பெரமுன கட்சியின் 42 பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக இயங்கவுள்ளதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்ற. இதன் காரணமாக ஆளும் பொதுஜன பெரமுன கட்சி 113 ஆசனங்கள் என்ற தனி பெரும்பான்மையினை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளமன்ற உறுப்பினர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலமாக பாராளுமன்றம் சென்று அரச தரப்புக்கு ஆதரவு வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர் முஷரப், பாராளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் அடங்கலாக இந்த 41 பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக இயங்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பெரும்பான்மையை இழந்தது ஆளும் கட்சி?
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version